சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் உத்தமன் கைது

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் 32 வயது நபரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த உத்தமன் (32) என்பவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, உத்தமனை கைது செய்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

Advertisement

பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் பணியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களில் தொடர்ந்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வெளியாகும் ஜனநாயகன்- பிரம்மாண்டமாக தயாராகி வரும் கோவை திரையரங்குகள்…

நாளை வெளியாகும் ஜனநாயகன் திரைப்படத்தை முன்னிட்டு கோவை சாந்தி திரையரங்கம் முன்பு பிரம்மாண்ட கட் அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...