கோவையில் கொடூரம்… ஆட்டுடன் உறவில் ஈடுபட்ட வாலிபர் கைது!

கோவை: கவுண்டம்பாளையம் அருகே ஆட்டுடன் தகாத முறையில் ஈடுபட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (54). இவர் தனது வீட்டின் அருகே கொட்டகையில் சுமார் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை, இவரது ஆட்டுக் கொட்டகையின் அருகேயுள்ள புதர் பகுதியிலிருந்து ஆடு ஒன்று வழக்கத்திற்கு மாறாகக் கத்தும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த சதீஷ்குமார், என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகப் புதர் பகுதிக்குச் சென்றுள்ளார்.

Advertisement

Also Read: கோவையில் பரபரப்பு சம்பவம்… ராமநாதபுரம் மேம்பாலத்தில் தொங்கிய இளைஞர்

அப்போது, அங்கு கட்டுமான வேலைக்காக வந்து தங்கியிருந்த வடமாநில வாலிபர் ஒருவர் சதீஷ்குமாரின் ஆட்டுடன் தகாத முறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

Advertisement

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் பதறியடித்துக் கொண்டு, அந்த வாலிபரைத் தடுத்துக் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தகாத வார்த்தைகளால் திட்டி சதீஷ்குமாரை கீழே கிடந்த கற்களை எடுத்து வீசி தாக்கினார்.

மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

Also Read: அதிக ஒலி ஹார்ன்- பறிமுதல் செய்து அபராதம் விதித்த கோவை காவல்துறை…

இதுகுறித்து சதீஷ்குமார் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆட்டுடன் தகாத முறையில் ஈடுபட்டது மேற்கு வங்கத்தை சேர்ந்த கோவிந்தோ தாஸ் (35) என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் கோவிந்தோ தாஸை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கோவையில் ஆட்டிடம் வடமாநில வாலிபர் தகாத முறையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருவதையொட்டி முக்கிய பகுதிகளில் 48 மணி நேர டிரோன் தடை அமல்படுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...