கோவையில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்! இதெல்லாம் ஒரு பொழப்பா… நெட்டிசன்கள் விளாசல்…

கோவை: “ஜனநாயகன் படம் ஹிட் ஆகணும்… தலைவர் ஜெயிக்கணும்…” என்ற வேண்டுதலுடன், கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு முருகன் கோவிலில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பாலாபிஷேகம் செய்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஆனால் கோவையில் ஒரு ரசிகர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாகவே தனது அன்பை வெளிப்படுத்தினார்.

கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு முருகன் கோவிலுக்கு வந்த அவர், “ஜனநாயகன் பிளாக்பஸ்டர் ஆகணும்… தலைவர் இன்னும் பெரிய உயரம் அடையணும்…” என்று வேண்டிக்கொண்டு மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார். அதன்பிறகு முட்டி போட்டு கோவிலை சுற்றி முருகப்பெருமானிடம் மனமுருகி பிரார்த்தனையும் செய்தார்.

Also Read: கோவையில் ஜனநாயகன் படம் பார்த்த அமைச்சர்கள் அழுகை! – VIDEO

Advertisement

அந்த ரசிகரின் செயலால் கோவிலுக்கு வந்திருந்தவர்கள் ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு, அடுத்த நிமிடம் செல்போனை எடுத்து வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். “இது எந்த நேர்த்திக்கடன்?” என்று சிலர் ஆச்சரியப்பட்ட நிலையில், “இதெல்லாம் ஒரு பொழப்பா!” என்று மற்றவர்கள் சிரித்தபடி கருத்து தெரிவித்தனர்.

இந்த வித்தியாசமான நேர்த்திக்கடன் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காலத்திலும் ஒரு படத்திற்காக இப்படி பக்தியை கொச்சைப்படுத்துவது தேவை இல்லை என்றும், வெற்று விளம்பரத்திற்காக இதுபோன்று செய்பவர்களை கோயில் நிர்வாகம் அனுமதிக்கக்கூடாது என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

டெல்லி போராட்டம்- கோவையில் காத்திருப்பு போராட்டம் மூலம் ஆதரவு…

கோவை: டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக அலுவலகத்திற்குள் மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கோவையில் திமுக அலுவலகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...