கோவை: மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகளை கணக்கெடுக்க இல்லம் தேடி வரும் பணிகள் நடத்தப்படுகிறது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் (Community Rehabilitaion Worker CRW) மற்றும் சமூக வழி நடத்துனர்களை கொண்டு (Community Facilitator CF) செப்டம்பர் 2026 வரை வீடு வீடாக சென்று சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
ஆகையால், சமூக தரவுகள் கணக்கெடுப்பின் போது, மாற்றுத்திறனாளிகள் இல்லாத குடும்பங்களில் விவரங்களை பதிவு செய்ய குடும்ப அட்டையை மட்டும் வழங்கினால் போதுமானது.
மேலும்,தங்களது இல்லங்களில் மாற்றுத்திறனாகளிகள் இருப்பின் அடையாள அட்டை வைத்துள்ளோர் அவர்களது முழு விவரங்களை கணக்கெடுப்பாளர்களிடம் வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை இல்லாத மற்றும் புதிதாக கண்டறியப்படும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களுடைய விவரங்களை எந்த வித தயக்கமும் இன்றி களப்பணியாளர்களிடம் முழுமையாக வழங்கி, சமூக தரவுகள் கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும், சமூக தரவுகள் கணக்கெடுப்பினை முழுவதுமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் இது குறித்து கூடுதல், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் (0422 -2380381 மற்றும் 9499933471) என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.




