பொள்ளாச்சி ஜெயராமன் மகன் சிக்கப்போவது உறுதி – கோவை புகழேந்தி பேட்டி

கோவை: பொள்ளாச்சி ஜெயராமன் மகன் சிக்கப்போவது உறுதி என கோவையில் தவெக ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஏற்படுத்திய விபத்து வழக்கை கொலை வழக்காக விசாரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் தற்போது மீண்டும் மறு விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தவெக ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவை செளரிபாளையம் பகுதியில் உள்ள இல்லத்தில் தவெக ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், நீண்ட தடைகளை தாண்டி ஜனநாயகன் திரைப்படம் நேற்று வெளியானது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் பார்த்தது போல ஜனநாயகன் படம் இருந்ததாக தெரிவித்தார்.

Advertisement

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் போது கார் விபத்து ஏற்பட்டு அங்கு இருந்து பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் அங்கிருந்து தப்பித்துச் சென்று இரண்டு நாள் கழித்து காவல் நிலையத்தில் சாரணடைந்தார் என கூறிய அவர் அப்போது அந்த விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது அது விபத்தல்ல கொலை என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது மறு விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மேலும் இதனை கண்டித்து பெண்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.

மேலும் அந்த நேரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்ததால் அவரது மகன் காவல் நிலையத்தில் இருந்து சொந்த ஜாமினில் விட்டதாகவும் சரி வர விசாரணை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Advertisement

பொள்ளாச்சி ஜெயராமன் தவெகவில் இணைபவர்களை ஓடுகாலி என்று தொடர்சியாக விமர்சனம் செய்து வருவதாகவும் திமுக எம்எல்ஏ முதல்வர் விஜயை எலும்பை ஒடைப்பேன் என்று விமர்சனம் செய்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.இதே போல இவர்களை சிறையில் அடைத்தால் இனி பேசாமல் இருப்பார்கள் என்றும் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொடர்ச்சியாக முதல்வர் விஜய் மீது விமர்சனம் செய்து வருகிறார்கள் அவர்கள் பேச்சை திரும்பி பெறவிட்டால் அவர்கள் மீது வழக்கு தொடர்வோன் என எச்சரிக்கை விடுத்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட இருப்பவர்கள் கட்சியை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.அதில் குறிப்பாக பொள்ளாச்சி ஜெயராமன்,கேபி முனுசாமி,திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்,கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த உள்ளிட்டோர் கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.

சிவி சண்முகம் உள்ளிட்டோர் தவெகவில் இணைவார்கள் அல்லது தவெகவிற்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி இடம் சண்டை போட்டு கொண்டு இருப்பார்கள் எனவும் விரைவில் எஸ்.பி வேலுமணி அதிமுக கட்சியின் தலைமையேற்று கட்சியை வழி நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகிய சசிகலா உள்ளிட்டரை கட்சியிலில் இருந்து நீக்கிவிட்டார்.குறிப்பாக முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்சியை விட்டு நீக்கிவிட்டார் எனரார்.

தற்போது அதிமுக அழிவு பாதைக்கு சென்று விட்டது மீதமுள்ள 5 சதவீதம் பேர் தான் கட்சியில் இருக்கிறார்கள் என்று கூறினார்.

முதலமைச்சர் விஜய் வேட்பாளர்கள் அறிவிக்கும் போது வேட்பாளர் பெயர், முகம் கூட தெரியாது ஆனால் அவர் வெற்றி பெற செய்தார்கள் ஒன்று முதல்வர் விஜயின் முகம் மற்றொன்று விசில் சின்னம் என்று தெரிவித்தார். தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-கள் மீது உள்ள ஊழல் குற்றசாட்டு கேள்விக்கு, அவர்கள் மீது ஊழல்கள் உள்ளது என்றார் அவர்கள் தா ஊழல் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தங்களை குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டால் அவர்களை முதல்வர் விஜய் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்கள் என கூறினார்.

டெல்லியில் நடைபெறும் கர்ப்பம்பூச்சி போராட்டத்திற்கு பாராட்டுக்குரியது தான் என்றும் முதல்வர் விஜய் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஊழலுக்கு துணை போக மாட்டார் என்றார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...