சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வாலிபர் மீது, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவை தெலுங்குபாளையம், சுப்பிரமணிய உடையார் வீதியைச் சேர்ந்த சுரேஷ் (25) என்பவர், கடந்த மாதம் 21-ஆம் தேதி சிறுவன் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் பேரில், கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சுரேஷின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாநகர காவல் ஆணையர் கண்ணனுக்கு பரிந்துரை செய்தார்.

Advertisement

அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாநகர காவல் ஆணையர் கண்ணன், சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவர் மீது குண்டர் சட்டம் அமல்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தூய்மைப் பணியாளர்களுக்கான உரிமை முகாம்; 3,963 பேர் பயனடைந்தனர்

கோவை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான உரிமை முகாமில் 3,963 பேர் பங்கேற்று பயனடைந்தனர். அரசு நலத்திட்டங்கள், தொழிலாளர் நலன் மற்றும் மருத்துவக் காப்பீடு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...