தூய்மைப் பணியாளர்களுக்கான உரிமை முகாம்; 3,963 பேர் பயனடைந்தனர்

கோவை: கோவை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான உரிமை முகாமில் 3,963 பேர் பங்கேற்று பயனடைந்தனர். அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், 14 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டன.

Advertisement

முகாமில் வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவத்துறை, திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம், தாட்கோ, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட 12 அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று, அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து தூய்மைப் பணியாளர்களுக்கு விரிவான விளக்கமளித்தனர்.

மேலும், பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதுடன், இ.எஸ்.ஐ., பி.எப். உள்ளிட்ட தொழிலாளர் நலத் திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலிருந்தும் மொத்தம் 3,963 தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும், 14 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...