கோவையில் பெண்களுக்காக கோ மகள் மாரத்தான்…

கோவை: பெண்களின் உடல்நலம், பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் அதிகாரமளிப்பை வலியுறுத்தும் வகையில் கோமகள் மாரத்தான் 2026 கோவையில் நடைபெற்றது.

Advertisement

கோவை நேரு ஸ்டேடியம் முன்பிருந்து தொடங்கிய இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 3 கிலோமீட்டர் பிரிவுகளில் நூற்றுக்கணக்கான பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ஓடினர்.

Off Screen Hub மற்றும் நிர்மலா மகளிர் கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதுடன், சமூகத்தில் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சம உரிமை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

மாரத்தானில் பங்கேற்ற அனைவரும் “Run for Her” என்ற முழக்கத்துடன் உற்சாகமாக நடைபயணத்திலும் ஓட்டத்திலும் ஈடுபட்டனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

Advertisement

நிகழ்ச்சியில் பேசிய விருந்தினர்கள், “Run for Her என்பது ஒரு மாரத்தான் மட்டுமல்ல; பெண்களின் பாதுகாப்பு, சமத்துவம், உடல்நலம் மற்றும் அதிகாரமளிப்பை முன்னிறுத்தும் ஒரு சமூக இயக்கம்” என்று வலியுறுத்தினர்.

“ஒவ்வொரு அடியும்… பெண்களின் முன்னேற்றத்திற்கான மாற்றத்தின் தொடக்கம்” என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சென்ற இந்த கோமகள் மாரத்தான், கோவையில் பெண்கள் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வாக அனைவரின் பாராட்டையும் பெற்றது.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

டெல்டா மாவட்டங்களில் இருந்து கோவை வந்தடைந்த அரிசி மூட்டைகள்…

கோவை: டெல்டா மாவட்டங்களில் இருந்து கோவைக்கு 2500 டன் அரிசி வந்தடைந்தன. வருடம் தோறும் குறிப்பிட்ட மாத இடைவெளியில் டெல்டா மாவட்டங்களில் இருந்து நியாயவிலை கடைகளுக்கான அரிசிகள் டெல்டா மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...