உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு; சித்தாபுதூரில் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கோவை சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைப்பு; பணத்தாள்களை மட்டும் திருடிச் சென்ற மர்ம நபர்கள்

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோவையில் நடைபெற்ற ஆணழகன் போட்டி!

Advertisement

கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்த மர்ம நபர்கள், அதனை அருகிலுள்ள காலியிடத்திற்கு எடுத்துச் சென்று அதில் இருந்த பணத்தாள்களை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.

உண்டியலில் இருந்த சில்லறை நாணயங்கள் மற்றும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் திருடாமல் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

VIDEO

Also Read:மயங்கி விழுந்த முதியவர் மீது பைக் மோதி பலி; போலீசார் தீவிர விசாரணை

கொரோனா காலகட்டத்திலும் இதே கோவிலில் இதுபோன்ற திருட்டுச் சம்பவம் நடைபெற்ற நிலையில், மீண்டும் அதேபோன்று சம்பவம் நடந்துள்ளது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் பாதுகாப்பை அதிகரித்து, இந்த திருட்டில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...