உலக தாய்ப்பால் வாரம்- கோவையில் இராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்…

கோவை: உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

Advertisement

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி சார்பில், தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி மற்றும் ஃபிளாஷ் மாப் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதங்கள் முழுமையாக தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் அவசியம் மற்றும் தாய்–சேய் நலன் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வண்ணம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், தாய்ப்பால் வழங்கும் தாய்மார்களுக்கு குடும்பம், பணியிடம், சுகாதார நிறுவனங்கள் மற்றும் சமூகம் முழுவதும் ஆதரவான சூழல் உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Advertisement


மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் தாய்ப்பால் வங்கியில் இதுவரை 31.25 லட்சம் மில்லி லிட்டர் தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக பாஸ்சுரைஸ் செய்யப்பட்டு, குறைப்பிரசவத்தில் பிறந்த மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.


ரேஸ் கோர்ஸ் தாமஸ் பார்க்கில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், செவிலியர் கல்லூரி மாணவர்கள் ஃபிளாஷ் மாப் கலைநிகழ்ச்சி மூலம் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

Advertisement

தொடர்ந்து நடைபெற்ற பேரணியில், தாய்–சேய் நலன் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

உதயநிதி ஸ்டாலின் கைது சரியே- புகழேந்தி பேட்டி…

கோவை: உதயநிதி ஸ்டாலின் கைது சரியானது தான் என தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது எனக்கு...

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை: வாடிக்கையாளர் போல் வந்து ஐஃபோனை களவாடிய பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து, கடையில் இருந்த ஐபோனை (iPhone 13) நைஸாகப் பேண்ட் பாக்கெட்டில்...