கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர்.
போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்ரெட்டி அறிவுறுத்தலின் படி சூலூர் காவல் நிலைய காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்துறையினர் சூலூர் போட் ஹவுஸ் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வேலூர் மாவட்டத்தைச் மணி (31) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், காவல்துறையினர் அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.



