கோவை: வருகின்ற 19ம் தேதி கோவை வடக்கு வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசுவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டவாறு, மக்களை நேரடியாக அணுகி அவர்களது குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகாணும் வகையில், அரசு இயந்திரமே களத்திற்கு வரும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வட்டத்தில் தங்கியிருந்து கள ஆய்வில் ஈடுபட்டு, அந்த வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும். சேவைகளும் தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்கிறார்.
இதன்படி, 19.08.2026 காலை 9.00 மணி முதல் 20.08.2026 காலை 9.00 மணி வரை கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் இம்முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
இம்முகாமின்போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டத்துறை தலைமை அலுவலர்கள் அப்பகுதியில் தங்கியிருந்து, கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு, அந்தந்த கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம், வருவாய் ஆய்வாளர் (RI) அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) சமுதாயக்கூடம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுஇடங்களையும் ஆய்வு செய்து, சந்திக்கும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வார்கள்.
கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் கோயம்புத்தூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களை, ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டத்துறை தலைமை அலுவலர்கள் 19.08.2026 காலை 9.00 மணி முதல் 20.08.2026 காலை 9.00 மணி வரை ஆய்வு செய்துஜ் வருகை தரும் பொதுமக்களிடமிருந்து மனுக்களையும் பெறுவார்கள்.
ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒதுக்கப்பட்ட அலுவலர்களிடம் பொதுமக்கள் தங்களது கிராமப் பகுதிகளிலேயே மனுக்களை வழங்கலாம். மேலும், 19.08.2026 அன்று மாலை 4.00 மணியளவில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் மனு அளிக்கலாம்.
உங்களைத்தேடி, உங்கள் ஊரில் திட்டம் கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் மொத்தம் உள்ள 30 வருவாய் கிராமங்களிலும் நடைபெறவுள்ளது. இப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இத்திட்டம் குறித்த உரிய விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சேவைகளையும
நலத்திட்டங்களின்
பயன்களையும் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.





