கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் பப்பாளியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் பப்பாளியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 18.08.2026 மற்றும் 19.08.2026 ஆகிய இரண்டு நாட்களில் வழங்கப்பட உள்ளது.
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் மதிப்பூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில் பப்பாளியில் இருந்து -பழரச பானம், தயார் நிலை பானம், கேண்டி (மிட்டாய்),
தக்காளியில் இருந்து ஊறுகாய், சூப், சாஸ், ஜாம், கெட்சப் உலரவைக்கப்பட்ட தக்காளி ஆகியவற்றிற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இதில் சேர்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500 + GST 18%) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9488518268 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.




