விமானவியல் துறையில் அடுத்த புரட்சி- 100 விமானங்களுக்கு கோவை- தஞ்சாவூர் ஒப்பந்தம்…

கோவை: 100 விமானங்களுக்காக Pullinam Aerospace – Skyworks Aviation இடையே ரூ.175–200 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் விமானவியல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத் துறையில் முக்கிய முன்னேற்றமாக, தஞ்சாவூரைத் தலைமையிடமாகக் கொண்ட Pullinam Aerospace Technologies Pvt. Ltd, கோயம்புத்தூரைச் சேர்ந்த Skyworks Aviation International நிறுவனத்துடன் 100 விமானங்களை விற்பனை செய்வதற்கான Binding Letter of Intent (LOI)ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த LOI-யின் மதிப்பு சுமார் ரூ.175–200 கோடி என மதிப்பிடப்படுகிறது.

இந்த ஒப்பந்தம், Institute of Aeronautics, Astronautics and Aviation (IAAA) அமைப்பு, தமிழ்நாடு அரசின் StartupTN உடன் இணைந்து நடத்திய National Aerospace and Aviation Startup Conclave நிகழ்வில் கையெழுத்தானது. இந்நிகழ்வை கோயம்புத்தூரில் உள்ள Nehru Institute of Technologies, Nehru Group of Institutions நடத்தியது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், Pullinam உருவாக்கி வரும் PAT-LSA01 இரண்டு இருக்கைகள் கொண்ட CTOL (Conventional Take-Off and Landing) விமானம் வழங்கப்பட உள்ளது. இந்த விமானம் மின்சார இயக்கம் மற்றும் Internal Combustion Engine (IC Engine) ஆகிய இரு வகை இயக்க அமைப்புகளிலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

Advertisement

தென்னிந்தியாவின் முக்கியமான விமானத் துறை நிறுவனங்களில் ஒன்றான Skyworks Aviation International விமான விற்பனை, விமான உதிரிபாகங்கள், விமான லீசிங் மற்றும் ஹெலிகாப்டர் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது.

PAT-LSA01 விமானம் தற்போது மேம்பாட்டு நிலையில் உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் விமானத்தின் Flight Testing கட்டத்தை நோக்கி Pullinam முன்னேற உள்ளது என்றும் விமானம் தனது முதல் flight test-ஐ மேற்கொள்வதற்கு முன்பே கிடைத்துள்ள இந்த 100 விமானங்களுக்கான Binding LOI, விமானத்தின் தொழில்நுட்பத்திற்கும் சந்தைத் தேவைக்கும் கிடைத்துள்ள முக்கியமான வணிக அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

100 விமானங்களுக்கான இந்த உறுதிப்பாடு, தமிழ்நாட்டிலிருந்து ஒரு உள்நாட்டு விமான உற்பத்தித் திட்டத்தை உருவாக்கும் Pullinam Aerospace நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...