கோவை: எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக வந்த சொகுசு கார் பயங்கரமாக மோதிய விபத்தின் அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் பட்டணம் பகுதியில் நேற்று நள்ளிரவு வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்துள்ளது. அப்போது லாரி ஒன்று வழக்கமான வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியுள்ளது.
இந்த பயங்கர மோதலில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து உருக்குலைந்தது. காரில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லாரியின் பின்புறத்தில் கார் மோதும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
VIDEO
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் அதிவேகமாக இயக்கப்பட்டதா? அல்லது ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read: Coimbatore Weather Report: கோவையில் இந்த வாரம் 3 நாட்கள் மழை… எப்போது?





