கோவையில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி தருவதற்கு ஆசிரியர்கள் தேவை…

கோவை: கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்பினை கையாள திறமையான ஆசிரியர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group IGr.II/IIA, Gr.IV, TNUSRB SI, PCTRBTET, SSC, RRB, IBPS தொடர்ந்து பயிற்சி வகுப்புகளும், மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் TNPSC Gr.II/IIA, IBPS, ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு வகுப்புகள் துவக்கப்படவுள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், புவியியல்வரலாறு, அரசியலமைப்பு (Polity), பொருளாதாரம், இந்திய தேசீய இயக்கம் INM)நுண்ணறிவு, திறனறிவு மற்றும் காரணவியல் (Aptitude & Reasoning)நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) ஆகிய பாடங்களில் பயிற்சி வகுப்புகளையும், SSCIBPS, Railways தேர்வுகளுக்கான பயிற்சி திறம்பட கையாள தகுதியான பயிற்றுநர்கள் தற்போது தேவைப்படுகின்றனர்.

பயிற்றுநர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.800/- மதிப்பூதியம் வழங்கப்படும். (மதிப்பூதியம் ரூ.500/-வினாத்தாள் தயாரிப்பு ரூ.200/-PPT – ரூ.100/- என்ற வகையில் வழங்கப்படும்) வகுப்புகளையும் பாடங்களில், பயிற்சி வகுப்புகளை கையாள அனுபவம் வாய்ந்த, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், தங்களது புகைப்படத்துடன் கூடிய சுயவிவரக் குறிப்புடன் (Resume) நேரிலோ அல்லது அஞ்சல் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

விண்ணப்பிக்கும் முகவரி
துணை இயக்குநர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வளாகம்,
G.N.மில்ஸ்,
கோவை- 29. விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.09.2026 ஆகும். மேலும் விவரங்களுக்கு 0422-2642388 என்ற தொலைபேசி எண்ணைத்தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...