கோவை: கோவையில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அலுவலர்கள் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டமாக வீட்டுக் கணக்கெடுப்பு மற்றும் வீடுகள் பட்டியலிடல் (HLO) பணிகள் 01.08.2026 முதல் 30.08.2026 வரை கணக்கெடுப்பாளர்கள் மூலம் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கெடுப்பு பணிகள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கு 10 வட்ட (கோயம்புத்தூர் தெற்கு நீங்களாக) அலுவலகங்களின் வட்டாட்சியர்கள், 7 நகராட்சி அலுவலகங்களின் ஆணையாளர்கள் மற்றும் 33 பேரூராட்சி அலுவலகங்களின் செயல் அலுவலர்கள் ஆகியோர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் எவ்வித தயக்கமின்றி கணக்கெடுப்பு அலுவலர்களிடம் தங்களது வீடு, குடும்ப உறுப்பினர்கள் அடிப்படை வசதிகள் குறித்த சரியான தகவல்களை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்பணியில் விடுபட்ட வீடுகள் மற்றும் பகுதிகள் இருப்பின் பொதுமக்கள் அதனை அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







