கோவை: தேசிய மருத்துவ தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் நீட் முதுகலை தேர்வு கோவையில் 18 மையங்களில் நடத்தப்படுகிறது.
தேசிய மருத்துவ தேர்வு வாரியம் நீட் முதுகலை தேர்வை ஒருங்கிணைத்து நடத்துகிறது அதன்படி இன்று நாடு முழுவதும் முதுகலை தேர்வு நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் தேர்வர்கள் 8:30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கோவையில் 18 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது கோவை மாவட்டத்தை பொருத்தவரை புறநகர் பகுதிகளை ஒட்டியுள்ள மையங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. கோவையில் இந்த தேர்வை 4393 பேர் எழுதுகின்றனர்.
காலை 7 மணி முதல் தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் முன்னதாக அவர்களது ஹால் டிக்கெட் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சரி பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் தேர்வர்கள் சோதனை செய்யப்படுகின்றனர் டார்ச் லைட் மூலம் தேர்வர்களின் காதுகள் கூட சோதனை செய்யப்படுகிறது.




