கோவையில் அமைச்சர் ஆனந்திற்கு உற்சாக வரவேற்பு!

கோவை: திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த அமைச்சர் ஆனந்துக்கு தவெக.,வினர் பூங்கொத்துக்கள், கும்பம் மரியாதை கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement

சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமாரின் மகன் திருமணம், சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஆனந்த் இன்று விமானம் மூலம் கோவை வந்தார்.

கோவை விமான நிலையத்தில் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement

தொண்டர்கள் அளித்த பூங்கொத்துக்களையும் ரொம்ப மரியாதையும் ஏற்றுக்கொண்ட ஆனந்த், ஒவ்வொரு தொண்டருக்கும் கை கொடுத்தபடியே வந்தார்.

இடையே, தவெக தொண்டர்கள், ” பொதுச் செயலாளர் வாழ்க” என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது வாய் மீது விரல் வைத்து காண்பித்து, அனைவரும் அமைதியாக இருக்குமாறு கூறினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து தொண்டர்களை சந்தித்தவாறே வந்த ஆனந்த் ஊடகத்தினர் மைக் வைத்திருப்பதைப் பார்த்ததும், அங்கிருந்து விலகிச் சென்றார்.

செய்தியாளர்கள் பலரும், மேட்டூர் அணை திறப்பு குறித்தும், முதலமைச்சர் வருகை குறித்தும் கேள்விகளை சந்திப்பதோடு, செய்தியாளர்களை சந்திக்க ஏன் மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

ஆனால், எதற்கும் செவிசாய்க்காத அமைச்சர் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டு காரில் ஏறிச் சென்றார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...