நேபாளத்தை பெரு வெள்ளம் தாக்கியதில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகமே இந்த சம்பவத்தால் அதிர்ந்து போயுள்ள நிலையில், இந்த பேரிடரை தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் முன்பே கணித்திருந்தது பலரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனவுகளுடன்…
நேபாளத்திற்கு ஆகஸ்ட் 25ம் தேதி வரை வழக்கமான நாளாக தான் இருந்து வந்தது. ஆனால், ஆக., 26ம் தேதி இது அப்படியே தலைகீழானது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து என பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகவும், பிற பகுதிகளைச் சுற்றிப்பார்க்கவும் மிகவும் ஆர்வத்துடனும், ஆசையுடனும் அந்நாட்டில் குவிந்திருந்தனர்.

அந்த சமயம் பெரும் இரைச்சலுடன் சத்தம் கேட்டதை உணர்ந்த மக்கள், கண் இமைக்கும் நேரத்திற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது. நேபாள – திபெத் எல்லையில் அமைந்துள்ள பனிப்பாறைகள் திடீரென உருகி, செயற்கை வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் பாயும் கோஷி ஆற்றின் வழியாக சீரிப் பாய்ந்த வெள்ளம், பல நூறு அடிகளுக்கு மேல் உயர்ந்த ராட்சத அலை போல தோன்றி, பேரழிவை ஏற்படுத்தியது.
1000 பேர் பலி
‘தப்பித்து ஓடி விடுவோம்’ என்ற எண்ணம் தோன்றி முடியும் நொடிகளில் அனைத்தையும் வாரி சுருட்டிக் கொண்டது. நேபாளம் மற்றும் திபெத் (சீனா) பகுதியில் இதுவரை 950க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4,700க்கும் அதிகமானோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட இந்தியர்களும் அடங்குவர். இதுவரையில் 21 தமிழர்கள் உள்பட 149 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால், சுமார் 300 இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. அதில், கோவையைச் சேர்ந்த குடும்பத்தினரும் அடங்குவர். நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நதிகளில் இருந்து 7 இந்தியர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நுவாகோட் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,158 பேரைக் காணவில்லை. 933 பேர் நீர்மின் திட்டப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள், 45 நேபாள ராணுவ வீரர்கள், 38 காவல்துறை மற்றும் ஆயுதப் பிரிவு காவலர்கள், மற்றும் 18 சுங்க மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகள் அடங்குவர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபெர்னிகஸ் ஆய்வகத் தரவுகளின்படி, நேபாளத்தின் திரிசூலி பள்ளத்தாக்குப் பகுதியில் 2,500க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலுமாகத் தரைமட்டமாகியுள்ளன. பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்ட பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு கட்டிடங்கள் அழிந்துவிட்டன. ஓரளவு சேதமடைந்த கட்டிடங்களையும் சேர்த்தால் 70 சதவீதத்திற்கும் அதிகமான கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரிடரால் இப்பகுதியில் வாழ்ந்த சுமார் 6,000 பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் நிலை
நேபாளத்திற்கு ஆன்மீக மற்றும் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 84 பேருடன் இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து மொத்தம் 305 பேர் பயணம் செய்துள்ளதாகவும், அவர்களில் 220 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 21 பேர் பத்திரமாகத் தமிழகம் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7வது நாளாக…
ராணுவம், ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன ட்ரோன்கள் மூலம் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.நீர்மின் திட்டங்களின் சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை மீட்கும் பணியில் நேபாள மீட்புக்குழுவினருடன் இந்திய மற்றும் சீன நிபுணர் குழுக்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
அதேவேளையில், குகைகளில் சிக்கியர்வகளை மீட்புக்கான சிறப்பு உபகரணங்கள், டிஎன்ஏ சோதனைக் கருவிகள், தற்காலிக பாலங்கள் மற்றும் உயர் திறன் கொண்ட ட்ரோன்களை வழங்குமாறு, அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா மற்றும் இந்தியாவிடம் நேபாள அரசு உதவி கோரியுள்ளது.

ஏற்கனவே, இந்தியா சார்பில் டன் கணக்கில் மருத்துவ மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், அடையாளம் தெரியாத உடல்களில் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக தடயவியல் குழுவினர் மற்றும் மீட்பு பணிகளுக்காக மீட்பு குழுவினரும் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அன்றே கணிப்பு
நேபாள வெள்ளத்திற்கு அதன் புவியியல் அமைப்பே காரணம் என்று புவியியல் வல்லுநர்கள் கூறி வந்தாலும், இந்த பெரு வெள்ள அபாயத்தை கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமே, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஷெல்வி கணித்திருப்பது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2026 புத்தாண்டு தொடர்பாக கடந்த டிசம்பர் 26ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; 2026 ஜனவரி 1ம் தேதி பிறக்கும் நாள், திரயோதசி திதி ரோகினி நட்சத்திரம், ரிஷப ராசி. பிரதோஷமான நாள். ரிஷபத்தில் ஆண்டு பிறப்பதை நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். 65 சதவீதம் கெட்ட பலன் தான். 35 சதவீதம் தான் உலகிற்கு நல்ல பலன். நீங்கள் என்னை திட்டினாலும் சரி இதுதான். இமய மலைப்பகுதி, அதனை சுற்றியுள்ள நாடுகளாக இந்தியா, நேபாளம், சீனா, பாகிஸ்தான், வங்கதேச ஆகிய நாடுகள் உள்ளன.
அணை உடையும்
பேராபத்து சூழ்ந்துள்ள காலகட்டம் என்பதை நியாகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு சுற்றியுள்ள நாடுகளுக்கு பெரும் பிரச்சினைகள் இருப்பதால், அது இந்தியாவுக்கும் எதிரொலிக்கும். வங்கதேசத்தில் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். இயற்கை பேரிடர்கள் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். சனி வந்து குரு வீட்டில் இருக்கும் காலகட்டம். 2026,2027 வரைக்கும் இருக்கும். குருவின் வீட்டில் சனி இருக்கும் போது, கடகத்தில் குரு உச்சம் பெற இருக்கிறார். இதுபோன்ற காலகட்டத்தில் உலகிற்கு பேரழிவு நிச்சயம். 2027 ஜூன் வரையில் நிறைய பிரச்சினைகளை எதிர்பார்க்கலாம்.
தீவிரவாத அச்சுறுத்தல்கள், போர்கள், ஆயுதங்களினால் ஏற்படும் பாதிப்புகள், நோய் தொற்றுகள், நிலநடுக்கம், குறிப்பாக கடல் தான் நிறைய சேதத்தை ஏற்படுத்தும். கடல், மழை, வெள்ளம் தான். மழை அப்படியே ஊற்றும். 55 சென்டி மீட்டர், 20 சென்டி மீட்டர், 95 சதவீதம் மழை. தண்ணீர் நிற்பது எல்லாம் கிடையாது. அணை உடைந்து நிற்குமாம். அப்படியே மேட்டூர் அணையில் தண்ணீர் வந்தால் எப்படி இருக்குமோ, அப்படி வரும். என்ன பண்ணுவீங்க.
ஒரு பெரிய மாடி வீட்டில் உள்ள மேல்நிலை தொட்டி உடைந்தால் எப்படி இருக்கும். அதுபோல உடைந்து ஊத்துமாம். ஒரு லட்சம் கனஅடி நீர் இருக்கும் அணை உடைந்தால், தண்ணீர் எப்படி வரும். அத்தனை லட்சங்கள் கனஅடி உள்ள தண்ணீர் எல்லாம் ஊத்துமாம். வானிலை ஆய்வு அறிக்கைகள் எல்லாம் பொய்க்குமாம், இவ்வாறு அவர் கூறினார்.
கணிக்க முடியுமா?
அவர் கணித்ததைப் போலவே, நேபாளத்தில் பனிப்பாறை சரிந்து பெரு வெள்ளம் ஏற்பட்டு, பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்த நிலையில், ஜோதிடர் ஷெல்வியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஜோதிடர் ஷெல்வியின் இந்தக் கணிப்பு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் நடக்கும் பேரிடர்களை கூட கணிக்க முடியுமா? என்று அனைவரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
நேபாளம் வெள்ளம் மட்டுமில்லாமல், ஆமதாபாத்தில் 260க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்த ஏர் இந்தியா விமான விபத்தையும் இவர் முன்கூட்டியே கணித்திருந்ததும், தற்போது பெரிதும் பேசப்பட்டு வருகிறது.





