வலுவான Comeback கொடுப்போம்- CSK கேப்டன் உறுதி…

கோவை: அடுத்த IPL தொடரில் CSK அணி வலுவான கம்பேக் கொடுக்கும் என கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிச்சயம் வலுவான மீள் வருகையை (கம்பேக்) கொடுக்கும் என்று அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிஎஸ்கே அணியின் கேப்டனாகப் பொறுப்பு வகிப்பது என்பது தொடர்ந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பயணமாகும். எம்.எஸ். தோனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இருப்பினும், அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு பொறுப்பை ரசித்துச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன்.

Advertisement

எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்காமல், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு போட்டியையும் கவனத்தில் கொண்டு செயல்படுவதே எனது அணுகுமுறையாகும்.
கடந்த சீசனில் அணியின் செயல்பாடு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம்.

ஆனால், அடுத்த சீசனில் அணி நிச்சயம் வலுவாகத் திரும்பும். கடந்த 2008 முதல் சிஎஸ்கே அணியுடன் ரசிகர்கள் பல வெற்றிகளையும் சிறப்பான தருணங்களையும் கொண்டாடியுள்ளனர்.

Advertisement

அதேபோல அணியின் கடினமான காலகட்டங்களிலும் ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தொடர்ந்து அளிக்க வேண்டும்.
அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணியில் தொடர்வது குறித்த கேள்விக்கு, ரசிகர்கள் என்ன விரும்புகிறார்களோ அதுவே எனது முடிவாக இருக்கும்.

மேலும், அணிக்கு அடுத்த சீசனில் தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார்; அதற்கான முடிவை எடுக்க இன்னும் போதுமான கால அவகாசம் உள்ளது. 13 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான திறமை மிகவும் உற்சாகமளிக்கும் வகையில் உள்ளதாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...