கோவை: மாணவி அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு கோவையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேரணி மேற்கொள்ளப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் நினைவு நாளில் இன்று இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவையில் பேரணி நடைபெற்றது.
மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் அருகே துவங்கிய இந்த பேரணி சித்தாபுதூர் வரை நடைபெற்றது. இதில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் ஆதர்ஷ் ஷாஜி மாநிலத் துணைத் தலைவர் முகேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும் மோடி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் பதவிகளை ஏந்தி சுமார் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பேரணி மேற்கொண்டனர்.
இது குறித்து பேட்டி அளித்த எஸ் எப் ஐ அகில இந்திய தலைவர் அதர்ஸ் ஷாஜி நீட் தேர்வால் தான் அனிதா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார் மேலும் நீட் தேர்வு கொண்டு வந்தது முதல் எஸ்.எப்.ஐ சார்பில் தொடர்ந்து அதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த தேர்வில் உள்ள குளறுபடிகளாலும் அரசியல் மெத்தனம் போக்கினாலும் தான் அனிதா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் கல்வி உரிமைக்கான ஒரு தியாகி என்றும் குறிப்பிட்டார்.
மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதோடு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவையும் சிதைத்து வருகிறது என்று கூறிய அவர் பல்வேறு அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் கூட இல்லை என்று குற்றம் சாட்டினார்.
கல்வி தற்பொழுது தனியார் மயமாகி வருகிறது என்றும் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யும் வரையில் என்டிஏ அமைப்பு கலைக்கப்படும் வரையில் தங்களது அறப்போராட்டம் ஓயாது என்றும் கூறினார். மேலும் வட மாநிலத்தில் வீட்டு சமையல் வேலை செய்யும் ஒரு தாய் அவரது மகளின் கல்வி கட்டணத்திற்காக மாரத்தான் போட்டியில் பங்கேற்பதையும் சுட்டிக்காட்டினார்.





