கோவை பாரில் குடிபோதையில் மோதல்: பயங்கரமான Fight காட்சிகள் உள்ளே!

கோவை: கோவையில் மதுப்பிரியர்கள் பயங்கரமோதல், சேர்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதோடு, சாலையிலும் இறங்கி சண்டையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Advertisement

​கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் 11 to 11 பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நேற்று இரவு மதுப்பிரியர்களுக்கு இடையேற் திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது மதுப்பிரியர்கள் ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கிக் கொண்டனர். பாரின் உள்ளே ஒரு தரப்பினரும், வெளியேயும் ஒரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனைப் பார்த்த பாரில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த பயங்கர மோதலை அங்கு இருந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து உள்ளார். ​தற்போது அந்த செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மக்களின் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், பொது இடத்தில் அமைந்துள்ள இதுபோன்ற பார்களை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...