கோவை: கோவையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் வேலைவாய்ப்பு குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் உதவியாளர் உடன் இணைந்த அமர்வு எழுத்தர் இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர்-1, மற்றும் அலுவலக -1 உதவியாளர்-1 உள்ளிட்ட 3 பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடங்களுக்கான வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். வயது வரம்பு 42 ஆகும். கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்திற்கு கூடுதல் பணியிடமாக உதவியாளர் உடன் இணைந்த அமர்வு எழுத்தர் பணிக்கு மாத தொகுப்பூதியம் ரூ.25,000-யும், இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர் பணிக்கு மாத தொகுப்பூதியம் ரூ.20,000 யும், அலுவலக உதவியாளர் பணிக்கு தொகுப்பூதியம் ரூ13,000 வழங்கப்படும்.
உதவியாளர் உடன் இணைந்த அமர்வு எழுத்தர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் ஒன்றில், 10+2+3 அல்லது 11+1+3 என்ற கல்வி முறையில் அறிவியல், கலை, வணிகவியல், பொறியியல், மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் ஒரு துறையில் பெறப்பட்ட இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு நேரடி நியமனம் செய்யப்படும்போது, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் (Directorate of Technical Education) நடத்தப்படும் Computer on Office Automationபயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கணினி தொடர்பான பட்டயம் (Diploma) அல்லது பட்டப்படிப்பு (Degree) முடித்தவர்களுக்கோ முன்னுரிமை அளிக்கப்படும்.
இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர் பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு (VIII) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் உரிய விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இப்பதவிகளுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Passport Size) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 2-ஆவது தளம்பழைய கட்டடம், அறை எண்.32 மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர் 18. தொலைபேசி எண். 0422 2300305 என்ற முகவரிக்கு 22.09.2026 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.





