தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம்- வேளாண்பிரிவு வகுப்பு துவக்க தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் வேளாண்பிரிவு வகுப்புகள் துவங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு)
இளமறிவியல் மற்றும் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 2026-2027
கல்லூரி தொடக்க நாள் 16.09.2026 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-27ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின், வேளாண்மைப் பிரிவால் வழங்கப்படும் இளமறிவியல் பட்டப்படிப்புகள் (UG) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டயப்படிப்புகளுக்கான (Diploma) மாணவர் சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த இணையதள விண்ணப்பங்கள் பெறப்பெற்றன.

மாணவர் சேர்க்கையின் தரவரிசைப்பட்டியல் 03.07.2026 அன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து. 09.07.2026 முதல் பல்வேறு கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இறுதிக்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 10.09.2026 அன்று நிறைவடைந்தது.

Advertisement

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகள், மேலும் பட்டயப் படிப்புகளில் சேர்க்கைப் பெற்ற மாணவர்களுக்கான வகுப்புகள் 16.09.2026 அன்று தொடங்கப்பட உள்ளன.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் பிரிவிற்கு 17.09.2026 அன்று வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

மாணவர்கள் தங்களின் சேர்க்கை பெற்ற கல்லூரிகளுக்கு, குறிப்பிடப்பட்ட தேதிகளில் நேரில் சென்று சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...