பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு!

கோவை : கோவை குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஹெல்மெட், சீட் பெல்ட், வேகக்கட்டுப்பாடு மற்றும் சிக்னல் விதிகளை பின்பற்றுவது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் மகேஸ்வரன் ஆகியோரின் உத்தரவின்பேரில், போக்குவரத்து போலீசார் சார்பில் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு சாலை விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் குனியமுத்தூர் போக்குவரத்து எஸ்.ஐ. அன்பழகன் மற்றும் சிறப்பு எஸ்.ஐ. ரமேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான முக்கிய அறிவுரைகளை வழங்கினர்.

Advertisement

இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், கார்களில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும், அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும், போக்குவரத்து சிக்னல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட சாலை விதிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

மேலும், சாலை விதிகளை தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஹெல்மெட், சீட் பெல்ட், வேகக்கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிக்னல்களை முறையாக பின்பற்றுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...