மேற்கு புறவழிச்சாலையில் பைக் வீலிங்… கல்லூரி மாணவர்களுக்கு TC? பேரூர் போலீஸ் நடவடிக்கை

கோவை: கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு புறவழிச்சாலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் வீலிங் மற்றும் அதிவேக சாகசங்களில் ஈடுபட்டதாக 4 கல்லூரி மாணவர்களை பேரூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேற்கு புறவழிச்சாலையில் சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பேரூர் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது வீலிங்கில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாகசத்திற்கு பயன்படுத்தப்பட்ட 4 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடிய 3 இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை போலீசார் சேகரித்துள்ளனர். அதன் அடிப்படையில் வாகன உரிமையாளர்களின் முகவரிகளை கண்டறிந்து, தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட 4 பேரும் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் படிக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அறிக்கை சமர்ப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு புறவழிச்சாலையில் தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் வீலிங் மற்றும் அதிவேக ரேஸிங்கில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரூர் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement

மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பழங்குடியினர் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்…

கோவை: கோவை ஆனைக்கட்டியில் 1,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுடன் தீபாவளி கொண்டாடிய MLA கனிமொழி சந்தோஷ். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆனைக்கட்டி மற்றும் பாலைமலை பகுதிகளில் பழங்குடியின மக்களுடன் இணைந்து சட்டமன்ற...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...