“திருடன்… திருடன்…” என அலறிய முதியவர்! உக்கடத்தில் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்

கோவை: உக்கடம் பேருந்து நிலையத்தில் முதியவரிடம் செல்போன் திருடிய ஒடிசா வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

கோவை உக்கடம் புதிய பேருந்து நிலையத்தில் முதியவரின் சட்டைப் பையில் இருந்து செல்போனை திருடிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை செல்வபுரம் நஞ்சப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (58). இவர் தனது நண்பர் சுகுமாறனுடன் மஞ்சனூர் செல்வதற்காக நேற்று காலை உக்கடம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

Also Read: கோவையில் வீட்டில் திருட எதுவும் கிடைக்காத ஆத்திரம்… பொருட்களை அடித்து நொறுக்கிய கொள்ளையன்!

Advertisement

அப்போது பாலக்காடு செல்லும் அரசுப் பேருந்தில் ஜெகநாதன் ஏற முயன்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவருக்குப் பின்னால் வந்த நபர் ஒருவர், ஜெகநாதனின் சட்டைப் பையில் இருந்த செல்போனை நைசாக திருடியுள்ளார்.

சட்டைப் பையில் கை வைப்பதை உணர்ந்த ஜெகநாதன், உடனடியாக “திருடன்… திருடன்…” என கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு உஷாரான நண்பர் சுகுமாறன் மற்றும் அங்கிருந்த பயணிகள், தப்பியோட முயன்ற அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

Advertisement

also Read: சிறுவாணி அணையில் தொடரும் கனமழை! 30 அடியை கடந்த நீர்மட்டம் – கோவை குடிநீர் விநியோகம் அதிகரிப்பு

பின்னர் அவரை உக்கடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தாஸ் சான்டு (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது! தாழ்வான பகுதிகளை கண்காணிக்க கோவை கலெக்டர் உத்தரவு

கோவையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...