“செப்டிக் டேங்கில் விழுந்த காட்டெருமை!” – தோட்ட தொழிலாளர்களின் செயல் -video

கோவை: கோவை வால்பாறை அருகே செப்டிக் டேங்கிற்குள் தவறி விழுந்த 5 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமையை, வனத்துறையினர் மற்றும் எஸ்டேட் தொழிலாளர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

Advertisement

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார தேயிலைத் தோட்டப் பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் 2-வது டிவிஷன் ஐந்துலயன் பாடி பகுதியில் நள்ளிரவு காட்டெருமை ஒன்று சுற்றித்திரிந்தது.

அப்போது எஸ்டேட் தொழிலாளி ஜோதி என்பவரது வீட்டருகே அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்க் மீது காட்டெருமை ஏறியபோது, எதிர்பாராத விதமாக தொட்டி உடைந்து உள்ளே தவறி விழுந்தது. வெளியே வர முடியாமல் காட்டெருமை தத்தளித்த நிலையில், அதன் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கும், எஸ்டேட் நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

Also Read: வீட்டுக்குள் புகுந்து கொள்ளை முயற்சி! சிக்கிய நபரை மரத்தில் கட்டிய பொதுமக்கள் -VIDEO

Advertisement

தகவலறிந்து வனக்காப்பாளர் தர்மராஜ், மனித-வனவிலங்கு மோதல் தடுப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் எஸ்டேட் தொழிலாளர்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

காட்டெருமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செப்டிக் டேங்கின் சுவர்கள் பாதுகாப்பாக உடைக்கப்பட்டு, அது மேலேறி வருவதற்கான பாதை அமைக்கப்பட்டது. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அதிகாலை நேரத்தில் காட்டெருமை காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டது.

Advertisement

Also Read: உள்ளாடைக்குள் 2.5 கோடி மதிப்பு தங்கம்- கோவையில் சிக்கிய இருவர்…

மீட்கப்பட்ட பின்னர் காட்டெருமை அங்கிருந்த வனத்துறையினரை நோக்கி ஆக்ரோஷமாக ஓடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வனத்துறையினர் அதனை விரட்டியதைத் தொடர்ந்து அருகிலிருந்த வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.

நள்ளிரவு நேரத்திலும் துரிதமாக செயல்பட்டு காட்டெருமையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர், மனித-வனவிலங்கு மோதல் தடுப்புக் குழுவினர் மற்றும் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அமைச்சர் வன்னியரசுவின் செயல் விஜய் அரசுக்கு தீங்கு விளைவிக்கும்- கிருஷ்ணசாமி கருத்து…

கோவை: அமைச்சர் வன்னியரசுவின் செயல் விஜய் அரசிற்கு தீங்கு விளைவிக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்க பரிசீலிக்கப்படும் என கூறியதற்கு அமைச்சர் வன்னியரசு மன்னிப்பு...

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...