என்னடா கொஞ்சமா தண்ணி கொடுக்குற!” – வாலிபரை கத்தியால் குத்திய சகோதரர்கள் கைது

கோவை : கோவை சிவானந்தா காலனி அருகே குடிக்க குறைவாக தண்ணீர் கொடுத்ததாக கூறி ஏற்பட்ட தகராறில், வாலிபரை கத்தியால் குத்தி இரும்பு கம்பியால் தாக்கிய சகோதரர்கள் இருவரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவை சிவானந்தா காலனி கண்ணுசாமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (29). இவர் கடந்த 20-ம் தேதி இரவு தனது வீட்டின் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்பு நண்பர்கள் வினோத்குமார், குமார் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ஆஸ்மின் நகரைச் சேர்ந்த சிவகிருஷ்ணன் (30) மதுபோதையில் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர் குடிக்க தண்ணீர் கேட்ட நிலையில், திருப்பதி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொடுத்துள்ளார். ஆனால் தண்ணீர் குறைவாக இருப்பதாக கூறி, சிவகிருஷ்ணன் அந்த தண்ணீரை திருப்பதி மற்றும் குமார் மீது ஊற்றியுள்ளார். இதனை குமார் தட்டிக்கேட்டதை தொடர்ந்து சிவகிருஷ்ணன் அங்கிருந்து சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து சிவகிருஷ்ணன் தனது சகோதரர் சிவலிங்கம் (36) என்பவருடன் மீண்டும் அங்கு வந்துள்ளார். இருவரும் திருப்பதியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை திருப்பதி தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த சிவகிருஷ்ணன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருப்பதியின் தலையில் குத்தியுள்ளார்.

Advertisement

அப்போது சிவலிங்கம் இரும்பு கம்பியால் திருப்பதியின் முதுகில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த திருப்பதி அலறியுள்ளார். சத்தம் கேட்டு அவரது நண்பர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

காயமடைந்த திருப்பதியை அவரது நண்பர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Advertisement

இதுகுறித்து திருப்பதி ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகிருஷ்ணன் மற்றும் சிவலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் சிமெண்ட் தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் கைது…

கோவை: மதுக்கரை ACC சிமெண்ட் தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள் கைது செய்து அழைத்து செல்லப்பட்டனர்ம் கோவை மாவட்டம், மதுக்கரை...

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...