“ஒவ்வொரு வெள்ளியும் சுய ஆய்வு!” – கல்வி நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து கமிஷனர் உத்தரவு

கோவை : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பொறுப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதி காப்பாளர்களுக்கான டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடந்தது.

இதில் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா பேசியதாவது:

விடுதிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க, மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும். உணவருந்தும் கூடங்கள், தோட்டங்கள், பால்கனி, வாகன நிறுத்துமிடம், காத்திருப்பு பகுதி, சமையலறை நீர்த்தேக்கங்கள், குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட இடங்களில் நன்னீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

சாக்லேட் மற்றும் பிஸ்கட் பாக்கெட் கவர்கள், டீ கப்புகள், பார்சல் உணவு டப்பாக்கள் உள்ளிட்டவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல் விடும்போது அவற்றில் மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, விடுதி காப்பாளர்கள் இதனை தொடர்ந்து கண்காணித்து முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

Also Read: “ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதா?” காயத்துடன் தவித்த குட்டி யானை உயிரிழப்பு; மதுக்கரையில் சோகம்

Advertisement

மேலும், விடுதி வளாகங்களில் உள்ள முட்புதர்கள் மற்றும் தேவையற்ற செடிகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பொறுப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

அந்த பொறுப்பு அலுவலர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாநகராட்சியின் வாராந்திர லார்வா எதிர்ப்பு சுய ஆய்வு சரிபார்ப்பு பட்டியலை நிரப்ப வேண்டும். அதே நாளில் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் வாரந்தோறும் நடத்த வேண்டும்.

Also Read: கோவையில் 2 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை ; இட்லி கடை பெண் உரிமையாளர் கைது

இந்த நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனத்துக்கு சுழற்கேடயம் வழங்கப்படும். இதற்காக பிரத்யேக வாட்ஸ் அப் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த பயிற்சி முகாமில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் 150-க்கும் மேற்பட்ட விடுதி காப்பாளர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் விஜயகுமார், டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் குறித்து விளக்கினார். மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி, டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கினார்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

குறுக்கே வந்த பாம்பு- அலறி அடித்து ஓடிய சிறுவன்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: சைக்கிளில் சென்ற போது திடீரென குறுக்கே வந்த பாம்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சைக்கிள் ஓட்டி செல்லும் போது திடீரென குறுக்கே வந்த பாம்பைக் கண்டு அலறி அடித்து தாவி குதித்து...