கோவை பெண்களே உக்ஷார் ; ஓடும் பஸ்ஸில் தங்கத் தாலியை திருடிய பெண்கள்

கோவை : பொள்ளாச்சி – கோவை இடையே இயக்கப்பட்ட தனியார் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பயணியிடம் தங்கத் தாலியை திருடிய பெண் கையும் களவுமாக பிடிபட்டார். அவருடன் வந்த மற்றொரு பெண் தப்பி ஓடிய நிலையில், அவரை உக்கடம் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

பொள்ளாச்சி – கோவை இடையே இயக்கப்படும் தனியார் பஸ்சில் இனியவன் (23) என்பவர் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் அந்த பஸ் உக்கடம் காவல் நிலையம் எதிரே வந்து கொண்டிருந்தது.

அப்போது பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி 2 பெண்கள், சக பயணியின் கைப்பையில் இருந்து பொருளை திருட முயன்றதை நடத்துனர் இனியவன் கவனித்தார்.

இதையடுத்து உடனடியாக சுதாரித்த அவர், சக பயணிகளின் உதவியுடன் அந்த 2 பெண்களையும் பிடிக்க முயன்றார். பஸ் நிறுத்தப்பட்டதும் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டத்தில் இருந்து நைசாக தப்பி ஓடிவிட்டார்.

Advertisement

மற்றொரு பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் பொள்ளாச்சி குள்ளக்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரது மனைவி முத்துமாரி (23) என்பது தெரியவந்தது.

மேலும், அந்த பெண்ணிடம் இருந்து பயணியிடம் திருடப்பட்ட 2 கிராம் தங்கத் தாலி மீட்கப்பட்டது.

Advertisement

இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மற்றொரு பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.




Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

AI தொழில்நுட்பத்துடன் கூடிய சுற்றுலா இணைய தளம் துவக்கம்…

கோவை: AI தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா இணையதளத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...