செல்போன் ஹேக்… வங்கிக் கணக்கில் இருந்து ரூ.9.78 லட்சம் சுருட்டிய மர்மநபர்கள்!

கோவை : கோவை ஆனைமலையை சேர்ந்த பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலரின் செல்போனை ஹேக் செய்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.9.78 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

ஆனைமலையை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் உடுமலையில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வங்கிக் கணக்கு வைத்து பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை அவரது செல்போனுக்கு வழக்கத்திற்கு மாறாக ஏராளமான குறுஞ்செய்திகள் வந்துள்ளன. தினமும் சுமார் 700-க்கும் மேற்பட்ட மெசேஜ்கள் வந்ததுடன், பல்வேறு வெளிமாநில செல்போன் எண்களில் இருந்தும் தொடர்ச்சியாக மிஸ்டு கால்கள் வந்துள்ளன.

தொடர்ந்து அவரது செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.9 லட்சத்து 78 ஆயிரம் பணம் மர்மமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். செல்போனை ஹேக் செய்து வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தொழில்நுட்ப உதவியுடன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement



Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...