காலை முதல் பாதுகாப்புப் பணி… மதியம் வரை உணவுக்காக காத்திருந்த போலீஸார் – கோவையில் பரபரப்பு

கோவை : முதலமைச்சர் விஜய் கோவை வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், உணவுப் பொட்டலங்களுக்காக போலீஸார் சாலையோரத்தில் காத்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

Advertisement

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதலமைச்சர் விஜய் இன்று கோவை விமான நிலையம் வந்தார். இதையொட்டி கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமான நிலையம், அவிநாசி சாலை, சூலூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

காலை முதலே பல்வேறு இடங்களில் போலீஸார் பாதுகாப்பு மற்றும் வாகனத் தணிக்கை பணிகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பணியில் இருந்த போலீஸாருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, மதியம் 2.30 மணிக்கு பின்னர் உணவுப் பொட்டலங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், இதையடுத்து உணவு வழங்கும் வாகனத்தைச் சுற்றி போலீஸார் திரண்டதாகவும் கூறப்படுகிறது. உணவுப் பொட்டலங்களை போலீஸார் பெற்றுச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

Advertisement

முதலமைச்சர் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன.

இதனிடையே, பாதுகாப்புப் பணியில் நீண்ட நேரம் ஈடுபடும் போலீஸாருக்கு உரிய நேரத்தில் உணவு மற்றும் குடிநீர் கிடைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள

Advertisement

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...