முன் ஜாமின் கோரிய ஜான் ஜெபராஜ்; ‘லுக் அவுட்’ நோட்டீஸ்; கோவை போலீஸ் கிடுக்கிப்பிடி!

கோவை: போக்சோ வழக்கில் சிக்கிய மத போதகர் ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகர். கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். இவர், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று ஆராதனை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் அவர் 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளுக்கு தனது வீட்டில் வைத்து அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

அதன்பேரில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் அளித்த புகாரில் காட்டூர் அனைத்து மகளிர் போலீசார் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

Advertisement

போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், 3 தனிப்படை அமைக்கப்பட்டு ஒரு தனிப்படை தென் மாவட்ட பகுதிகளான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மறுபுறம் அவர் பெங்களூரில் இருந்து வெளிநாடு தப்பி செல்ல முயற்சி செய்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க காவல் துறையினர் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

Advertisement

அந்த நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, புகைப்படம், பாஸ்போர்ட் தகவல், வழக்கு உள்ளிட்ட விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும்

அவர் விமான நிலையம், துறைமுகத்திற்கு வந்தால் தகவல் அளிக்க வேண்டிய காவல் நிலைய தொடர்பு எண், அதிகாரிகள் விவரங்களும் அடங்கியிருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனவே மதபோதகரை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ஜான் ஜெபராஜ் தனக்கு முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தவெகவிற்கு ஆதரவு ஏன்? வெளிப்படையாக பேசிய எஸ்.பி.வேலுமணி…

கோவை: திமுக எதிர்ப்பு என்பதால் தான் தவெகவிற்கு ஆதரவளித்தோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அதிமுக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.