கோவையில் மோடி கபடி போட்டிகள்…

கோவை: கோவையில் மோடி கபடி கோப்பை 2026 போட்டியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் துடியலூரில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கபடிப் போட்டியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் ‘சேவா சங்கல்ப் அபியான்’ என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, துடியலூரில் ‘மோடி கபடி கோப்பை 2026’ என்ற தலைப்பில் கபடிப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கபடி வீரர்களுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, நாணயம் சுண்டிப் போட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்து, வீரர்களின் விளையாட்டுத் திறனைப் பார்வையிட்டார்.

Advertisement

இந்தப் போட்டியில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 56 கபடி அணிகள் பங்கேற்று விளையாடின.

போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்குப் பரிசுக் கோப்பைகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை ரயில் நிலையம் முற்றுகை- வலுக்கட்டாய கைது…

கோவை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். SIR விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி...

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...