மக்கள் நடமாடும் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதா? கோவை மாநகராட்சிக்கு நா. கார்த்திக் கண்டனம்!

கோவை: சங்கனூர் ஓடையைத் தூர்வாரி எடுக்கப்படும் குப்பைகள் மற்றும் துர்நாற்றம் வீசும் கழிவு மண்ணை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் கொட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் சுகாதாரப் பாதிப்பு ஏற்படுவதாகக் குற்றம்சாட்டிய திமுக முன்னாள் எம்எல்ஏ நா. கார்த்திக், மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் 52 மற்றும் 53-வது வார்டுகளை இணைக்கும் இடத்தில் சங்கனூர் ஓடையின் கிளை ஓடை செல்கிறது. இந்தப் பகுதியில் ஓடையைத் தூர்வாரும் பணியின்போது அகற்றப்படும் குப்பைகள் மற்றும் கழிவு மண் கொட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

Advertisement

இதுகுறித்து திமுக முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக், சம்பந்தப்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், சங்கனூர் ஓடையைத் தூர்வாருவது வரவேற்கத்தக்க நடவடிக்கைதான் என்றாலும், அதிலிருந்து அகற்றப்படும் குப்பைகள் மற்றும் துர்நாற்றம் வீசும் கழிவு மண்ணை மக்கள் அதிகம் நடமாடும் ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் கொட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தார். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

மேலும், இந்தப் பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாகவும், நேரில் சந்தித்தும் பலமுறை கோரிக்கை விடுத்ததாகக் கூறிய நா. கார்த்திக், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

பொதுமக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளுக்கு மேயர், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும் அவர் விமர்சித்தார். குறிப்பாக, எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மீது காட்டப்படும் அலட்சியத்தைப் போலவே, தங்களது கோரிக்கைகளும் புறக்கணிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்தார்.

Advertisement

எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் கழிவு மண்ணை அகற்ற வேண்டும் என்றும், அப்பகுதியில் உரிய சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நா. கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை மண்டல அளவிலான ஓவிய, சிற்பக் கலைக் கண்காட்சி – கலைஞர்களுக்கு அழைப்பு

கோவை: பாரம்பரிய கலைகளுக்கான போட்டிக்கு கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்து, கலைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...