நீலகிரி மலை ரயில் சேவை 3 நாட்கள் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

நீலகிரி: கனமழையால் நீலகிரி மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவுகளைச் சீரமைக்கும் பணிகள் நிறைவடையாததால், மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை நவம்பர் 2 முதல் 4ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. பாறைகள், மண் மற்றும் மரங்கள் தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து, தண்டவாளத்தில் உள்ள தடைகளை அகற்றி, பாதையைச் சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், மலைப்பகுதியின் கடினமான நிலப்பரப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாகப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் நீடிக்கிறது. பல இடங்களில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால், சீரமைப்புப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

இதன் காரணமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரயிலும் (எண்: 56136), ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் மலை ரயிலும் (எண்: 56137) நவம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

மேலும், நவம்பர் 2ஆம் தேதி ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படவிருந்த சிறப்பு மலை ரயிலும் (எண்: 06172) ரத்து செய்யப்பட்டுள்ளது.

மலை ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தீபாவளி ஷாப்பிங்கில் களைகட்டும் கோவை… விலை உயர்வால் குடும்பச் செலவு அதிகரிப்பு!

தீபாவளியை முன்னிட்டு கோவை கடைவீதிகளில் ஷாப்பிங் களைகட்டியுள்ளது. ஆடைகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...