கோவை: கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் காரணமாக 220 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கடையை திறக்க வலியுறுத்தி மதுப்பிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்குபவர்களிடம் யுபிஐ மூலம் மட்டுமே பணம் பெற வேண்டும், திரும்பப் பெறப்படும் காலி மதுபாட்டில்களை ஸ்கேன் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் 220 மதுக்கடைகள் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானம் வாங்குவதற்காக வந்தவர்கள், கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், ஹோப் காலேஜ் அருகேயுள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த மதுப்பிரியர்கள் சிலர், கடை திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். கடை திறக்கப்படாது எனத் தெரியவந்ததும், மசக்காளிபாளையம் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். கடையைத் திறக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, அங்கு வந்த போலீசாரும் வாகன ஓட்டிகளும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மறியலைக் கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே, பீளமேடு ரயில் நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில், நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உடன்பாடு எட்டப்படும் வரை கடைகளைத் திறக்க மாட்டோம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்கள் ஒருபுறம் கடைகளை மூடி போராட்டம் நடத்தி வரும் நிலையில், மறுபுறம் கடையைத் திறக்கக் கோரி மதுப்பிரியர்கள் சாலையில் இறங்கிப் போராடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடையை மூடச் சொல்லி போராட்டம் பார்த்திருப்போம்… ஆனா, கடையைத் திறக்கச் சொல்லி சாலை மறியல்! அதுவும் மதுப்பிரியர்களே சாலையில் இறங்கிய சம்பவம் கோவையில் நடந்திருக்கிறது!
கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால் 220 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதுபானம் வாங்கினால் யுபிஐ மூலம் மட்டுமே பணம் பெற வேண்டும்… காலி பாட்டில்களைத் திரும்ப வாங்கும்போது ஸ்கேன் செய்ய வேண்டும்… உள்ளிட்ட புதிய நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஹோப் காலேஜ் அருகே மதுபானம் வாங்க வந்தவர்கள், கடை திறக்கும் எனக் காத்திருந்தனர். ஆனால், கடை திறக்காது எனத் தெரியவந்ததும்… நேராக மசக்காளிபாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்!
கடையைத் திறக்க வலியுறுத்தி அவர்கள் போராடிய நிலையில், போலீசாரும் வாகன ஓட்டிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகே மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனிடையே, டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உடன்பாடு ஏற்படும் வரை கடைகளைத் திறக்க மாட்டோம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருபக்கம் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம்… மறுபக்கம் திறக்கச் சொல்லி மதுப்பிரியர்கள் மறியல்… கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தச் சம்பவம்!






