கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் பப்பாளியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் பப்பாளியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 17.11.2026 மற்றும் 18.11.2026 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறுகிறது.
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும். அதில்
பப்பாளி பழரச பானம், தயார் நிலை பானம், கேண்டி (மிட்டாய்)
தக்காளி ஊறுகாய், சூப், சாஸ், ஜாம், கெட்சப் உலரவைக்கப்பட்ட தக்காளி மற்றும் விழுது ஆகியவை செய்ய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500 + GST 18%) – பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும் என வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




