கோவை சரகத்தில் 22 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்… யார் எந்தப் பிரிவுக்கு மாற்றம்?

கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை காவல் சரகத்தில் 22 காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து டிஐஜி சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை சரகமான கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் 22 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து கோவை சரக டிஐஜி சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் கோமதி ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Also Read: குறைந்த விலையில் அடகு நகைகள் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி? கோவையில் பெண் புகார்

Advertisement

கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் கவிதா ஊட்டி நகர மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் நித்யா, கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

திருப்பூர் செய்யூர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி அவிநாசி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தளி இன்ஸ்பெக்டராகவும், தளி இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தனலட்சுமி நீலகிரி நெலக்கோட்டை இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement

அவிநாசி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அமுதா காருண்யா நகர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராகவும் , அங்கு பணியாற்றிய நாகமணி அவிநாசி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டள்ளனர்.

நம்பியூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரவி, ஈரோடு தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் அருள் ஆனைமலை சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும் , காங்கயம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நிர்மலா, கோபி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராகவும் அங்க பணியாற்றிய இன்ஸ்பெக்ட ஆண்டனி ஜெகதா காங்கயம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராகவும், பெருந்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஈரோடு சிவகிரி இன்ஸ்பெக்டராகவும், அங்கு பணியாற்றிய கிருஷ்ணகுமார் மடத்துக்குளம் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

Also read: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி எங்கே… கோவை மாநகராட்சியின் குட்டு அம்பலம்

க.க.சாவடி இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் க.க.சாவடி இன்ஸ்பெக்டராகவும், பெருந்துறை போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் கோவை மாவட்ட ஆயுதப்படைக்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் முருகன் பெருமாநல்லூர் போக்குவரத்துப் பிரிவுக்கும், ஈரோடு ஆயுதப்படையில் பணியாற்றிய லயோலா இன்னாச்சி, பெருந்துறை போக்குவரத்து பிரிவுக்கும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...