கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்! அடுத்த நொடியில் பேருந்து சக்கரத்தில் சிக்கிய சிறுவன்!

கோவை: கோவை போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 17 வயது சிறுவன், நிலைதடுமாறி கீழே விழுந்து தனியார் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட வெங்கடேஷ் என்பவரின் 17 வயது மகன், கோவை போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் தனது தாய்மாமா வீட்டில் தங்கியிருந்து கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில், இன்று இரவு சுமார் 9 மணியளவில் சிறுவன் தனது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் போத்தனூரில் இருந்து செட்டிபாளையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் உள்ள எஸ்.எம். கிளினிக் எதிரே சென்றபோது, சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதனால் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சிறுவன், அதே திசையில் சிங்காநல்லூரில் இருந்து செட்டிபாளையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 17 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை மாநகர மேற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் மற்றும் போத்தனூர் (D3) காவல் நிலைய போலீசார், உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தில் தொடர்புடைய தனியார் பேருந்தின் ஒட்டுநர் மற்றும் நடத்துநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் எவ்வாறு கட்டுப்பாட்டை இழந்தது என்பது உள்ளிட்ட விபத்துக்கான காரணங்கள் குறித்து மேற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் தனியார் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...