TNAU: வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை… கால அவகாசம் நீட்டிப்பு!

TNAU: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து வேளாண் பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப் படிப்புகளுக்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளமறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கும் ஒரே விண்ணப்பம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 6921 இடங்களுக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பிரிவுக்கு 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டயப்படிப்புகளில் உள்ள 1240 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 9ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக (http://tnau.ucanapply.com) விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 16ம் கடைசி நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 16ம் தேதிக்கு முன்பு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலும் மின்னஞ்சல் (email: ugadmissions@tnau.ac.in) மூலமாகவும் வாரநாட்களில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தொடர்புகொள்ளலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9865703537 மற்றும் 9442029913 என்ற அலைபேசி எண்களிலும், மின்னஞ்சல் (email agridean2015@gmail.com) மூலமாகவும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் திமுக பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை…

கோவை: கோவையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...