கலைஞர் கருணாநிதி நினைவு தினம்- கோவையில் அஞ்சலி…

கோவை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

Advertisement

தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கபடுகிறது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது பல்வேறு பகுதிகளில் அமைதி ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.

கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தில் திரைத்துறையினரும் தமிழ் ஆர்வலர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் மாநகர மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Advertisement

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும், கலைஞருன் திருவுருவ படத்திற்கும் அமைதி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநில தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரவுடிகளுக்கு செக் வைத்த கோவை போலீஸ்; 940 பேர் கண்காணிப்பில்

கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 940 ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், நடப்பாண்டில் 57 ரவுடிகள் மாநகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...