சாலையைக் கடக்கும் போது கவனம்; கோவையில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கோவை: கோவையில் சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பத்மாவதி (48). இவர் சம்பவத்தன்று அவினாசி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபர் எதிர்பாராத விதமாக பத்மாவதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.

இந்த விபத்தில் சாலையில் சரிந்து விழுந்த பத்மாவதிக்கு தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற நபர் குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையைக் கடக்கும் போது பைக் மோதி பத்மாவதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ரவுடிகளுக்கு செக் வைத்த கோவை போலீஸ்; 940 பேர் கண்காணிப்பில்

கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 940 ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், நடப்பாண்டில் 57 ரவுடிகள் மாநகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...