புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர் திருவிழா!!!

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர் திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்

கோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி ஆண்டுதோறும் நடைபெறும்.இந்த ஆண்டு ஆடம்பர தேர் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று அதற்கு முன்னதாக இன்று காலை முதல் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

இதற்கு கோவை மறைவமாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமை தாங்கினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நடைபெற்றது கொட்டும் மழையிலும் கிறிஸ்தவர்கள் தேரை இழுத்து பவனி வந்தனர்.

Advertisement

இந்த தேர் புலியகுளம் சுற்றுவட்டாரப் பகுதியை சுற்றி வந்தடைந்தது. தேர்பவனி முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் வானவில் சுயமரியாதை பேரணி…

கோவை: கோவையில் வெகுவிமர்சையாக வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. கோவையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருபால் ஈர்ப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோவையில் ஏழாவது வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது....

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.