தொழில் போட்டி: கோவையில் பைக்கிற்கு தீ!

கோவை: தொழில் போட்டி காரணமாக கோவையில் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்(38). இவர் துடியலூர் தொப்பம்பட்டி பகுதியில் தங்கி டைல்ஸ் ஒட்டும் ஒப்பந்த பணி எடுத்து செய்து வருகிறார்.

இவரிடம் ரோஹித் என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், ரோஹித் மற்றும் அவரது சகோதரர் தனியாக ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக ரோஹித்துக்கும், ஜெகதீசுக்கும் முன் விரோதம் உண்டானது. இந்நிலையில், நேற்று ஜெகதீஷ் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று ரோஹித் தகராறு செய்தார்.

Advertisement

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரோஹித் பெட்ரோல் ஊற்றி ஜெகதீசின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தார். பின்னர் அவரை மிரட்டி அங்கிருந்து சென்றார்.

இது குறித்து ஜெகதீஷ் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜஸ்தானை சேர்ந்த ரோஹித்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

விநாயகர் சதுர்த்தி- கோவையில் 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி...

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...