ராகுல்காந்தி எண்ணமே திமுக தோற்க வேண்டும் என்பதுதான்- கோவையில் அண்ணாமலை தெரிவிப்பு…

கோவை: திமுக தோற்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமை ஆதரித்து ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் பேசிய அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம், தீய சக்தி திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பல்வேறு வரை சுமைகள்தான் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுகவினர் மக்களை ஏமாற்றி விட்டதாக கூறிய அவர் நாங்கள் மத்திய அரசோடு இணைந்து பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்தார். மேலும் அண்ணாமலையை மத்திய அமைச்சராக கொண்டு வருவோம் என்றும் தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்தத் தொகுதியின் தேர்தல் களத்தை பார்க்கும் பொழுது ஒரே ஒரு வேட்பாளர் தான் உள்ளார் என்று கே.ஆர்.ஜெயராமை குறிப்பிட்டார்.

காங்கிரஸ் வேட்பாளர் தற்பொழுது தான் களத்திற்கு வந்துள்ளார் என்றும் அவர் கடந்த முறை மக்கள் நீதி மய்யம் சார்பில் உடுமலைப்பேட்டையில் போட்டியிட்டவர் என்றும் அப்பொழுது அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் திமுகவிற்கு எதிராக டிவி எல்லாம் உடைத்தார், பின்னர் அவரது கட்சியே இல்லாமல் போய் இறுதியாக திமுகவில் இணைந்துள்ளார் என்று விமர்சித்தார்.

ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருவதற்கு தயாராக இல்லை என்றும் அவருக்கு தேர்தல் முடிவு என்ன என்பது தெரியும் என்றும் மே நான்காம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் ஆவார் என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி எங்காவது வரவேண்டும் என்றால் கடல் இருக்க வேண்டும் அல்லது குளம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் கடல் இருந்தால் அதனை தாண்டி வருவார் குளம் இருந்தால் மீன்பிடிக்க வருவார் என்று விமர்சித்தார்.

ஆனால் கோவையில் சிங்காநல்லூர் கவுண்டம்பாளையம் தொகுதியில் குளத்தை வெட்டி மீனை விடுவதற்குள் இங்குள்ள நம் வேட்பாளர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்று தெரிவித்தார். தமிழகத்திற்கு ஆகாத கட்சி காங்கிரஸ் வரக்கூடாத கட்சி திமுக என்று சாதி அவர் இந்த இரண்டு கட்சிகளும் ஆமை புகுந்த வீடு மாதிரி என்று விமர்சித்தார்.

1965ல் பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை குறிப்பிட்டு பேசிய அவர் இஙி எதிர்ப்பு போராட்டத்தை திமுக காங்கிரசுக்கு எதிராக தான் நடத்தியது, அதன் பின்னர் காங்கிரஸ் உடனையே திமுக கூட்டணி வைத்தது, கட்ச தீவை இலங்கைக்கு கொடுக்கும் பொழுது மத்தியில் காங்கிரஸ் இங்கும் காங்கிரஸ் தான் ஆட்சி நடத்தியது, என்று தெரிவித்த அவர் தமிழகத்திற்கு ஒவ்வொரு பிரச்சனை வரும் பொழுதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் மாநிலத்தில் திமுக ஆட்சியும் தான் இருந்தது என்று தெரிவித்த இவற்றையெல்லாம் பார்த்து தான் வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி வேண்டாம் என்று முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்த அளவிற்கு நடைபெறவில்லை என்றும் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு குற்றங்கள் அரங்கேறி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டுவதற்காக மட்டும்தான் வருகிறார் என்றும் ஆனால் திட்டங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்படுகிறது என்று கூறினார். திமுகவை ஒரு இடத்திலும் கூட வரை விடக்கூடாது என்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் திருடன் கையில் சாவி கொடுத்தது போல என்று குறிப்பிட்டார்.

அதிமுக பாஜக குறித்து கனிமொழி பேசி வருவதை குறிப்பிட்டு பேசிய அவர் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும் பொழுது காங்கிரஸ் உடன் தான் திமுக இருந்தது அதனால் தான் மீனவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாகவும் பல்வேறு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இதற்கெல்லாம் பொறுப்பு திமுக காங்கிரஸ் தான் என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் கூட்டணி கட்சியினர்களுக்கே முறையாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் திமுக தோற்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைப்பதாகவும் ராகுல் காந்தி கோவை வேட்பாளர்களை கூட ஆதரித்து பேசவில்லை என்று தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியை பத்து ரூபாய் பாலாஜி என்று குறிப்பிட்டு பேசிய அண்ணாமலை செந்தில் பாலாஜி கோவை மாவட்ட திமுகவை அழிப்பதற்கு ஸ்கெட்ச் போட்டு வேலை செய்வதாகவும் தெரிவித்தார். செந்தில் பாலாஜி ஒரு விஷக்கிருமி என்றும் கரூரில் 251 பட்டிகள் போடப்பட்டது பின்னர் அதிமுக விஜயபாஸ்கர் இது குறித்து புகார் அளித்து மாவட்ட ஆட்சியர் அந்த பட்டிகளுக்கு பூட்டு போட்டுவிட்டார் என்றும் கோவை தெற்கு தொகுதியிலும் இதுபோன்று பல்வேறு பகுதிகளில் பட்டி அமைக்கப்படுகிறது என்றும் அங்கு உதயநிதி ஸ்டாலின் படத்தை போடுவதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி நிராகரிக்கப்பட வேண்டிய கட்சி என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தேர்தல் முடிந்தவுடன் பதவியை ரிசைன் செய்துவிட்டு செல்கிறேன் என்று கூறுகிறார்.

18ஆம் தேதி கோவைக்கு பிரதமர் மோடி வருவதாகவும் கோவை உலகத்தரம் வாய்ந்த ஊர் என்று அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் கூறியுள்ளார் நாங்கள் கோவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் வெயில் அதிகமாவதால் அவர் பொய்களும் அதிகமாகி வருகிறது என்றும் மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே தரவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார் என்று கூறி மத்திய அரசு மாநில அரசுக்கு அளித்த பல்வேறு நிதிகளை பட்டியலிட்டார்.

மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து பல்வேறு நிதிகளை கொடுத்துக் கொண்டே தான் இருக்கும் என்றும் அனைவரும் இரட்டை இலக்கிய வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்ட அண்ணாமலை தற்போது உள்ள வரிச் சுமைகளை குறைப்பதற்கு எடப்பாடி யார் பத்தாயிரம் ரூபாயை வங்கி கணக்கில் போடுவார் என்று தெரிவித்தார்.

தற்பொழுது பல்வேறு பகுதிகளில் திமுகவினர் 8000 ரூபாய் டோக்கன்களை கொடுத்து வருகிறார்கள் தேர்தல் முடிந்த பிறகு திமுக ஆட்சி அமைந்த உடன் அந்த டோக்கனில் பாதையை கிடைத்தால் நான்காயிரம் ரூபாய் கிடைக்கும் என்றெல்லாம் கூறுவார்கள் இதுபோன்று காதில் பூச்சுற்ற பார்ப்பார்கள் அவர்கள் உலகத்தரம் வாய்ந்த கில்லாடிகள் என்று திமுகவை விமர்சித்தார்.

தற்பொழுது டிஜிபி எல்லாம் மாற்றிவிட்டார்கள் என்று தெரிவித்த அண்ணாமலை இதேபோன்று வருகின்ற 23ஆம் தேதி வாக்காளர்கள் அனைவரும் இணைந்து முதல்வரை மாற்றிவிட்டால் போதும் எனவே அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

தன்னுடைய வாக்கு யாருக்கு?- மக்கள் மத்தியில் அறிவித்த அண்ணாமலை…

கோவை: தன்னுடைய வாக்கு யாருக்கு என்று மக்கள் மத்தியில் அறிவித்துள்ளார் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர் ஜி அருண்குமாரை...

Video