விவசாயிகளுக்கு வேளாண்மை துறை முக்கிய அறிவுரை ; உரங்கள் இருப்பு விவரம்

கோவை:கோவை மாவட்டத்தில் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகள் மண் பரிசோதனை செய்து ஒருங்கிணைந்த உர மேலாண்மை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடை மற்றும் பயிர் சாகுபடிக்காக மொத்தம் 12,522 மெட்ரிக் டன் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கோவை வேளாண்மை இணை இயக்குநர் திருவதி மீ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.

இதில் யூரியா 3,176 மெட்ரிக் டன், டிஏபி 1,458 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,033 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1,342 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளெக்ஸ் உரங்கள் 4,513 மெட்ரிக் டன் ஆகியவை தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பொதுவாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரங்களை பயன்படுத்தவும், அல்லது “தமிழ் மண் வள செயலி” பரிந்துரைப்படி உரங்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

உர விற்பனையாளர்கள், விவசாய நிலப்பரப்பு மற்றும் பயிர் தேவைக்கு ஏற்ப ஆதார் எண்ணை பதிவு செய்து மட்டுமே உரங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயியின் கைப்பேசி எண் மற்றும் கையொப்பத்துடன் ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நோனோ யூரியா, நோனோ டிஏபி, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் பயன்படுத்துவதன் மூலம் உர பயன்பாடு குறைந்து மண் வளம் அதிகரித்து, செலவும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உர விற்பனையில் முறைகேடுகள் அல்லது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் எச்சரித்துள்ளார்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.