கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- கோவை ஆட்சியர் அறிக்கை…

கோவை: கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணபிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்ட சேர்ந்தவர்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணபிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

துணிவு மற்றும் வீரசாகச செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லாவிருது ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. துணிச்சல் மற்றும் வீரசாகச் செயல்புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

உரிய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரிவான தன்விவரக் குறிப்புஉரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 19.06.2026-குள் கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...